Saturday, July 28, 2007

கடன்

''இறை நம்பிக்கையாளனின் உயிர் (அவன் கடன்பட்டவனாக இருப்பின்)
அவனுடைய கடன் அடைக்கப்படும் வரை அதனுடன் தொங்கிக்
கொண்டிருக்கும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என
அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். (அஹ்மத், திர்மிதீ)


இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தொழுகையில் பிரார்த்திக்கும்போது,
'இறைவா! பாவத்திலிருந்தும், கடனிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத்
தேடுகிறேன்' என்று கூறுவார்கள். (இதைச் செவியுற்ற) ஒருவர் நபி
(ஸல்) அவர்களிடம், 'இறைத்தூதர் அவர்களே! தாங்கள்
கடன்படுவதிலிருந்து இவ்வளவு அதிகமாகப் பாதுகாப்பத் தேடுவதற்குக்
காரணம் என்ன?' என்று கேட்டதற்கு நபி(ஸல) அவர்கள், 'மனிதன்
கடன்படும்போது பொய் பேசுகிறான்; வாக்குறுதி தந்து (அதற்கு) மாறு
செய்கிறான்' என்று பதிலளித்தார்கள். (ஆய்ஷா(ரலி) புகாரி - 2397)
எவன் மக்களின் பணத்தை (அல்லது பொருட்களைத்) திருப்பிச் செலுத்தும் எண்ணத்துடன் கடன் வாங்குகிறானோ அவன் சார்பாக அல்லாஹ்வே அதனைத் திருப்பிச் செலுத்துவான். எவன் திருப்பிச் செலுத்தும் எண்ணமின்றி அதை (ஏமாற்றி) அழித்து விடும் எண்ணத்துடன் கடன் வாங்குகிறானோ அல்லாஹ்வும் அவனை அழித்து விடுவான் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்கள். (2387)

Tuesday, July 24, 2007

why?

வேதத்தையுடையோரே! சத்தியத்தை அசத்தியத்துடன் ஏன் நீங்கள் கலக்குகிறீர்கள்? இன்னும் நீங்கள் அறிந்து கொண்டே ஏன் உண்மையை மறைக்கிறீர்கள்? 3:71.