Tuesday, December 07, 2010

வங்கி மைனஸ் வட்டி - Part 1


நாவலாசிரியராக, சிறுகதை ஆசிரியராக, வசனகர்த்தாவாக உங்களுக்கு முருகனைத் தெரிந்திருக்கும். வங்கியியல் வல்லுநராக ஒரு புதிய அறிமுகத்தை இப்போது செய்துகொள்ளுங்கள். உலகெங்கும் இன்று பிரபலமாகப் பேசப்படும் இஸ்லாமிக் பேங்கிங்கை இக்குறுந்தொடரில் அறிமுகப்படுத்துகிறார் இரா. முருகன்.
அமெரிக்காவிலும், பிரிட்டன் உட்பட பல ஐரோப்பிய நாடுகளிலும் கவர்மெண்ட் செலவில் தேசிய அளவு பயம் ஏற்படுத்தி வைக்கப்பட்டிருப்பது இஸ்லாமிய சமூகத்தைக் குறித்துத்தான்.
கான், ஹசன், முஸ்தபா இப்படிப் பெயரை பாஸ்போர்ட்டில் பார்த்தாலே மேற்படி நாடுகளில் ஏர்போர்ட் இமிகிரேஷன் அதிகாரிகளின் பிளட் பிரஷர் எகிறிப்போகிறது. காது மடல் சிவக்க பாஸ்போர்ட்டை விரித்து பெஸ்ட் செல்லர் லிஸ்ட் புத்தகம்போல் ஒரு பக்கம் விடாமல், ஒரு வரி விடாமல் படிக்கிறார்கள்.
பல சந்தர்ப்பங்களில் உள்ளே தனியறையில் மணிக்கணக்காக விசாரணை செய்து பின் லேடனுக்கு ஒண்ணு விட்ட, எட்டு, எண்பது விட்ட தம்பிக்கு மச்சினன் சம்சாரத்துக்கு மாமா பிள்ளை இல்லை என்று உறுதிப்படுத்திக்கொண்டு, கடனே என்று கதவைத் திறக்கிறார்கள்.


ஓர் இனத்தையே மறைமுகமாக பயங்கரவாதி முத்திரை குத்திவைத்திருக்கும் இந்த நாடுகள் கூட, 'இஸ்லாமிய வங்கி' என்றால் இருகரம் நீட்டி வரவேற்று 'வாங்க, கோக் சாப்பிடுங்க' என்று உபசரிக்கின்றன.
அப்படி என்ன மந்திரச் சொல் இந்த இஸ்லாமிய வங்கியியல் (Islamic Banking) என்பது?
இட்லிக் கடை வைப்பதுபோல், இம்பாலா கார் கம்பெனி நடத்துவதுபோல், வங்கித்தொழிலும் லாபத்தைக் குறிக்கோளாக வைத்துத்தான் நடத்தப்படுவது. நேர்மையாக, தெய்வத்துக்கு, மனச்சாட்சிக்கு விரோதம் இல்லாமல் வங்கித்தொழிலை சமூக நோக்கில் நடத்த வழி சொல்வது இஸ்லாமிய வங்கியியல். லாபத்தையும் இழப்பையும் பகிர்ந்துகொள்ள வழிசெய்யும் ஒரு சமுதாயவியல்  அது.


ஆசையே துன்பத்துக்குக் காரணம் என்றார் கௌதம புத்தர். வட்டியே வங்கித் துறையில் நேர்மையின்மைக்குக் காரணம் என்கிறது இஸ்லாமிய வங்கியியல். ஆக, இஸ்லாமிக் பேங்கிங்கின் ஆத்திசூடி 'வட்டி வாங்காதே வழங்காதே' என்று தொடங்குகிறது. இந்த அரிச்சுவடியை எட்டாம் நூற்றாண்டிலேயே எழுதிவிட்டார்கள் என்பது விசேஷம். ஆமா சார், இஸ்லாமிய வங்கியியல் உலகம் முழுக்கக் கடைப்பிடிக்கப்படுகிற ஐரோப்பிய பேங்கிங்குக்கு மிக மிக மூத்தது.
இஸ்லாமிய வங்கியியலின் ஆதார சுருதி ஷரியா. அல்-ஷரியா என்று புனிதச் சட்டமாகப் போற்றப்படுவது இது.
மனிதன் எப்படி நடக்கவேண்டும் என்ற இறைவனின் விருப்பம்தான் ஷரியா.  பல கோடி இஸ்லாமியர்கள் இப்படித்தான் நம்புகிறார்கள். காசு கொடுத்து வாங்கும் வங்கித் தொழிலா, கையில் ஆயுதம் எடுத்து யுத்தம் புரியும் போர்த் தொழிலா, சுற்றுச் சூழலா, சமுதாய முன்னேற்றமா, ஷரியா தொடாத துறையே இல்லை.


ஷரியாவில் காணப்படும் வர்த்தகம் பற்றிய விதிகள் இஸ்லாமிய வங்கியியலில் முழுமையாகக் கையாளப்பட்டுள்ளன.
இந்த விதிமுறைகள் ஃபிக் அல்-முவாமலத் (Fiqh al-Muamalat) அதாவது, கொடுக்கல் வாங்கல் பற்றிய இஸ்லாம் மார்க்க விதிகள் என்று அழைக்கப்படும்.  இந்த விதிகளில் ஏதாவது ஒண்ணு ரெண்டை சாய்ஸில் விட்டாலும் அது இஸ்லாமிக் பேங்கிங் இல்லை, இல்லை இல்லவே இல்லை.
சரி, ஷரியா எங்கே இருந்து வந்தது?
இஸ்லாமிய மதநூல் புனித குரான் ஷரியாவுக்கு ஊற்றுக்கண். ஷரியாவின் இன்னொரு கண்ணாக விளங்குவது நபிகள் நாயகம் அவர்களின் முழு வாழ்க்கையுமேதான். அவர் பேசியது, போதித்தது, வாழ்ந்து காட்டியது இவை எல்லாவற்றையும் சித்திரிக்கும் ஹடித் (Hadith) என்ற வாழ்க்கைக் குறிப்புகள் இவை.
ஷரியா என்றால், 'தாகம் தீர்க்கும் குளிர்நீர் ஊற்றுக்கு இட்டுச் செல்லும் பாதை' என்று வெண்தாடியைத் தடவிக்கொண்டு நீண்ட சொல் விளக்கம் தருவார்கள் மார்க்க அறிஞர்கள். மரபு சார்ந்த… என்ன மரபு சார்ந்த வேண்டிக் கிடக்கு… ஐரோப்பிய தொழில் தர்மம்தான் நம் மரபாச்சே, ஐரோப்பிய  வங்கியியல் அண்மைக் காலத்தில், அதாவது கி.பி. 2008-ல் உலக அளவிலே பொருளாதார நெருக்கடிக்கு மூல காரணமாக இருந்தபோது, எத்தைத் தின்னால் பித்தம் தீரும், இந்த நிதிநிலை முடக்குவாதம் குணப்படும் என்று உலக வங்கியியல் அறிஞர்கள் அறிவுத் தாகத்தோடு அலைந்தார்கள். அப்போது அவர்களுக்குக் 'குளிர்நீர் ஊற்றாக' தட்டுப்பட்டது ஷரியாவும் இஸ்லாமிய வங்கியியலும்தான். நெஞ்சில் கையை வைத்துச் சொல்லச் சொன்னால் ஜார்ஜ் புஷ்கூட இதை மறுக்காமல், மறக்காமல் சொல்வார். எதுக்கும் இங்கிலீஷில் கேட்டுப் பார்க்கவும்.


ஷரியாவை நாம் புரிந்துகொள்ளும் சௌகரியத்துக்காக ஐந்து பகுதிகளாகப் பிரிக்கலாம்.
1)    மதம் சார்ந்த வழிபாட்டு நெரிமுறைகள் பற்றிய இபாதா (ibadah)
2)    (ஏற்கனவே பார்த்த) முவாமலத் – கொடுக்கல் வாங்கல் விதிகள் (mu'amalat)
3)    நீதி, பண்பாடு பற்றிச் சொல்லும் ஆதாப் (adab)
4)    நம்பிக்கைகள் பற்றிய லிதிகாதத் (i'tiqadat)
5)    ஷரியாவைக் கடைப்பிடிக்காவிட்டால் விதிக்கப்படவேண்டிய தண்டனைகள் பற்றிய உகுபத் (uqubat)
ஒரு நொடியில் இருந்து ஒரு முழு வாழ்க்கை வாழ்ந்து முடித்து அடங்குகிறது வரையான காலத்துக்குத் தேவையான சகல விதிமுறைகளும் ஷரியாவில் உண்டு. இதில் சொல்லப்படாத ஏதாவது சம்பந்தமாக வழிகாட்டுதல் வேண்டியிருந்தால் இஸ்லாம் மூன்று விதங்களில் அதற்குத் தீர்வு காணலாம் என்று வகுத்திருக்கிறது.
1)    அறிஞர்கள் கூடி ஆலோசித்து வழங்கும் பெரும்பான்மைத் தீர்வு
2)    ஒற்றை இஸ்லாமியப் பேரறிஞர் அலசி ஆராய்ந்து வழங்கும் தீர்ப்பு
3)    பழக்க வழக்கத்தின் அடிப்படையில் வழங்கப்படும் தீர்வு
தீர்வு வழங்கும்போது ஒன்றே ஒன்றை மனத்தில் இருத்திக்கொண்டால் போதும் – புனித குரானில் சொல்லியிருப்பதற்கு மாறாக அது இருக்கக்கூடாது.
ஷரியாவில் இருந்து பெறப்பட்ட இஸ்லாமிய வங்கியியல் விதிமுறைகள் பற்றி சிறு குறிப்பு வரைக என்றால் அடுத்த ஆறு பாராவையும் கனகம்பீரமாகச் சொல்லலாம்.


பணத்தைக் கொடுத்து வாங்கி, அதாவது 'வாடகைக்கு விடும்போது' (renting of money) அதற்குக் கூலி வாங்குவது பாவம். அந்தக் கூலிதான் வட்டி. இஸ்லாம் மொழிநடையில் வட்டி என்பது 'ரிபா' (Riba). பாவம் என்பது 'ஹராம்' (Haram).
ரிபா …சாரி'பா, அது ஹராம் நெம்பர் ஒன்.
ஷரியா தடைவிதித்த தொழில்களில் பணத்தை முடக்குவதும், அவற்றை எடுத்து நடத்தி லாபம் பார்ப்பதும்கூட ஹராம். போதைப் பொருள்கள், மது, சூது இப்படி எத்தனையோ இந்த ஹராம் பட்டியலில் உண்டு. அரசியல் இல்லை.
புனித குரான் சொல்கிறது, 'இறைவன் வணிகம் நடத்த அனுமதித்துள்ளான். ஆனால் ரிபாவுக்குத் தடை விதித்திருக்கிறான்.'
சவாலைச் சமாளிக்காமல் சம்பாத்தியம் இல்லை (There is no reward without taking any risk) – இதுவும் இஸ்லாமிய வங்கியியலின் இன்னொரு அம்சம்தான்.
இந்தச் சவாலும் சம்பாத்தியமும் உழைப்பு, முதலீடு ரெண்டுக்கும் பொருந்தும். உழைத்து, உழைப்பின் வெற்றியை அடைகிற சவாலைச் சந்திக்கும் தொழிலாளியும், நேர்மையாக முதலீடு செய்து லாபம் ஈட்டும் முதலாளியும் ஷரியாவின் கண்களில்  
ஒரேபோல!
இன்ஷா அல்லா, அடுத்த வாரம் தொடரலாம்.

நன்றி: தமிழ்பேப்பர்.நெட்

Source: http://www.tamilpaper.net/?p=555

 
 
 

 


Monday, December 06, 2010

நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் ஓபன் ஸ்கூல்





படிக்கணும்னு ஆசைப்பட்ட நேரம் வீட்டுல வசதியில்லை. இப்போ வசதியிருக்குஆனா,இந்த வயசுல ஸ்கூல்ல சேர்க்க மாட்டாங்க. என் பிள்ளைங்களை கேட்டு படிச்சிலாம்னா நமக்கு தேர்வு யார் நடத்துவாங்க... என்று யோசிப்பவர்களா நீங்கள்?

வீட்டுல வசதி கிடையாது. குடும்பத்தை நான்தான் கவனிக்கணும். -வேலைக்கும் போயாகணும். ஆனாபடிக்கணும்னு ஆசை இருக்காகஸ்கூலாக்கோடுடோரியல் மையத்துக்கோ போகறதுக்கு நேரம் கிடையாது. ஆனால்பள்ளிப்படிப்பை முழுசும் முடிக்கணும்னு ஆசைப்படறீங்களா... உங்களுக்கான கல்வி மையம் தான் உத்திரப்பிரதேசத்திலுள்ள நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் ஓபன் ஸ்கூல். தேசிய அளவிலான இந்த கல்வி நிலையத்தில் படிக்க நாட்டில் எந் மூலையில் இருந்தாலும் விண்ணப்பிக்கலாம். இது முற்றிலம் மத்திய அரசால் அங்கீகரிக்கட்ட கல்வி நிலையம். இங்கு படித்து முடித்து கிடைக்கும் சான்றிதழை வைத்து கொண்டு நாட்டில் எந்த பல்கலைகழகத்திலும் பட்ட படிப்பை தொடரலாம்.

இந்த திறந்த நிலைபளள்ளிக்கு நாடுமுழுவுதும் பதினொரு முக்கிய நகரங்களில் மையங்கள் செய்படுகின்றன. இது தவிர - 3367 பயிற்சி மையங்கள் உள்ளன. தற்போது இந்தகல்வி நிலையத்தில் உயர்நிலைமேல்நிலை கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கை மட்டும் சுமார் 15 லட்சம்.

யார் யார் சேரலாம்?பள்ளியில் இடைநின்ற மாணவர்கள்பள்ளியில் படிக்காத மாணவர்கள் இங்கே தொலை நிலைக்கல்வி மூலம் படிக்கலாம். வயது 14பூர்த்தியாகியிருந்தால் போதும். இங்கே பத்தாம் வகுப்புபண்ணிரண்டாம் வகுப்பு,தொழிற்படிப்புஸ்போக்கன் இங்கிலீஷ் போன்ற தனிப்பட்ட செல்ப் இம்ப்ரூவ்மெண்ட் பயிற்சிகளும் அளிக்கபடுகின்றன. பத்தாம் வகுப்பு படிக்க விண்ணப்பிப்பவர்கள் குறைந்தபடசம் ஐந்து பாடங்களை கண்டிப்பாக படித்தாக வேண்டும். இதில் குரூப் ஏ,குரூப் பி. என்னும் இரண்டுபிரிவுகள் உள்ளன. குரூப் ஏ வில் தமிழ்தமிழ்ஆங்கிலம்,ஹிந்திஉட்பட 17 - மொழிப்பாடங்கள் உள்ளன. மாணவர்கள் விரும்பும் ஏதாவது ஒரு மொழிப்பாடத்தையோஇரண்டு மொழி பாடங்களையோ தேர்ந்தெடுத்து படிக்கலாம்.
குரூப் பி பிரிவில் கணிதம்அறிவியல்சமூக அறிவியல்பொருளியல்பிசினஸ் ஸ்டடீஸ்ஹோம் சயின்ஸ்சைக்காலஜிபோன்ற 10 பாடங்கள் உள்ளன. மேல்நிலை கல்வி பாடப்பிரிவில் இதேபோல் இரண்டு பிரிவின் கீழ் பாடங்கள் வாழங்கப்படுகின்றன. ஆனால் மேல்நிலை கல்வி படிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள்பத்தாம் வகுப்பில் கண்டிப்பாக தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எட்டாம் வகுப்புபத்தாம் வகுப்புபன்னிரண்டாம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு குறைந்த பயிற்சி கட்டணத்தில் தொழிற்கல்வி படிக்கவும் இந்த கல்வி நிலையம் வழிவகை செய்கிறது.

எட்டாம்வகுப்பு  படித்துவிட்டுகுடும்ப சூழ்நிலை காரணமாக எலக்ட்ரீஷியன்பிளம்பர்,மெக்கானிக்கல் போன்ற தொழில்களை செய்து கொண்டு இருப்பவர்களுக்கு தங்கள் தொழில்  சார்ந்த சான்றிதழ் இருக்காது. அதனால் அவர்கள் கடைசிவரை அரசுப் பணிக்கோபொதுத்துறை நிறுவனங்களுக்கோ பணிக்கு செல்ல முடியாது. ஆனால் இந்த  கல்வி நிலையத்தில் திறந்த நிலை படிப்பாக ஆறு மாத பயிற்சிஒரு ஆண்டுப் பயிற்சி மற்றும் குறைந்த வார பயிற்சிகளாக  பல தொழிற்கல்வி பயிற்சி அளிக்கப்படுகிறது.

ஏற்கனவே தொழில் தெரிந்திருக்கும் மாணவர்களும்தொழில் அறிவு இல்லாத மாணவர்களும் இந்த  பயிற்சியில் சேர்ந்து படிக்கலாம். இரண்டாண்டு பயிற்சியாக டிப்ளமோ இன் ரேடியோலாஜி படிப்பு கற்று கொடுக்கப்படுகிறது. இப்படிப்புக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் கண்டிப்பாக பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இது தவிர கிராம சுகாதாரம்,  மகளிர்  மேம்பாடு குறித்த சான்றிதழ் பயிற்சி அளிக்கப்படுகின்றன. இப்படிப்புக்கு விண்ணப்பிக்க நான்காம் வகுப்பு படித்திருந்தால்போதுமானது. இது தவிர ஆறு மாத கால பயிற்சியாக  எலக்ட்ரிக்கல்,மோட்டார் ரீவைண்டிங்ரேடியோ பழுதுபார்த்தல்உடை தயாரித்தல்அழகு பயிற்சி போன்றவை கற்று தரப்படுகின்றன. இந்த பயற்சிக்கு எட்டாம் வகுப்பு படித்திருந்தால் போதுமானது. இதே போல டி.டி.பி. மற்றும் கணினி ஹார்டுவேர் மாத பயிற்சி பெற மாணவர்கள் குறைந்தபட்சம் பன்னிரண்டாம் வகுப்பு படித்திருக்க வேண்டும். குறைந்த கட்டணம்நிறைந்த கல்விகல்வி நிலையங்களுக்கு சென்று படிக்க வேண்டியதில்லை. புத்தகங்கள் உங்கள் வீடு தேடி வரும். வேலைவாய்ப்பு அதிகமுள்ள தொழிற்கல்வி,இவை அனைத்தையும் மொத்தமாக வழங்கும் சிறந்தஒரு திறந்தவெளி பள்ளியாக செயல்படுகிறது --------------------------
நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் ஓபன் ஸ்கூல். 

Link: 
As received from email