Wednesday, October 10, 2007

மேலானவர்கள்


(இறை நம்பிக்கையாளர்களே!) நீங்கள் துணிவை
இழந்துவிடவேண்டாம். கவலையுற வும் வேண்டாம். நீங்கள்
(உண்மை) முஃமின்களாக இருப்பீர்களாயின் நீங்கள் தாம்
மேலானவர்கள்..
திருக்குர்ஆன் 3:139

மறுமை நாள்




"மறுமை நாள் எங்களுக்கு (ஒருபோதும்) வராது\" என்று

நிராகரிப்போர் கூறுகின்றனர். (நபியே!) நீர் கூறுவீராக!

அவ்வாறல்ல, மறைவானவற்றை அறியக்கூடிய என்

ரப்பின் மீது சத்தியமாக, நிச்சயமாக அது உங்களிடம்

வந்தே தீரும். வானங்களிலோ, பூமியிலோ உள்ளவை ஓர்

அணுவளவும் அவனைவிட்டும் மறையாது. மேலும்

அதைவிடச் சிறிதோ அல்லது பெரிதோ தெளிவான

(\"லவ்ஹுல் மஹ்ஃபூள்\" என்னும்) பதிவேட்டில்

இல்லாமலில்லை.

திருக்குர்ஆன் (சூரா எண் :34, வசனம் எண்:3)