சவூதியில் இந்திய கல்வி நிறுவனங்கள் குறித்த கண்காட்சிபுதன்கிழமை, ஜனவரி 9, 2008
ரியாத்: இந்தியாவில் உயர் கல்வி படிக்கும் எண்ணத்தில் உள்ளவர்களுக்காக, முதல் முறையாக இந்தியக் கல்விக் கண்காட்சிக்கு சவூதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தியன் எஜுகேஷன் எக்ஸ்போ -2008 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கண்காட்சியில், இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் குறித்த முழுமையான தகவல்கள் கிடைக்கும்.ரியாத், தம்மாம், ஜெட்டா ஆகிய நகரங்களில் இந்த கண்காட்சி நடக்கிறது.
ரியாத் நகரில் உள்ள மரியாட் ஹோட்டலில் ஜனவரி 9ம் தேதி முதல் 11ம் தேதி வரை மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை கண்காட்சி திறந்திருக்கும்.
தம்மாம் நகரில் ஜனவரி 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் கார்ல்டன் அல் மான் ஹோட்டலில் கண்காட்சி நடைபெறும்.ஜெட்டாவில், ஜெட்டா மரியாட் ஹோட்டலில் 16ம் தேதி முதல் 18ம் தேதி வரை கண்காட்சி நடைபெறும்.
ரியாத்தில் உள்ள இந்தியத் தூதரகமும், ஜெட்டாவில் உள்ள இந்திய துணைத் தூதரகமும் இணைந்து இந்த கண்காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளன.