Monday, December 13, 2010

வேலைவாய்ப்புகளைக் குவிக்கப் போகும் அரபு நாடுகள்

 1932 ஆம் ஆண்டில் முதன் முதலில் அரபு மண்ணில் எண்ணெய் வளம் கண்டுபிடிக்கப்பட்ட போது உலகின் ஒட்டுமொத்தக் கவனமும் மத்திய கிழக்கு நாடுகளின் பக்கம் திரும்பியது. உலகமே ஒரு புதிய வாழ்க்கை முறைக்கு உட்படுத்திக் கொள்ளத் தயாரானது. குறிப்பாக இஸ்லாம் பிறந்த, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழ்ந்து மறைந்த மண்ணில் பீறிட்டு எழுந்த கருப்புத் தங்கம் என்கிற கச்சா எண்ணெய்ச் செல்வம் 1950-க்குப் பிறகு உலகத்தின் சமூக, அரசியல் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டது.

சவூதி அரேபியாவில் முதன்முதலாக தமாம் நகரில் 1939-ல் எண்ணெய் வளம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இரண்டாம் உலகப்போர் முடிவுற்ற காலத்தில் உலகில் இனி பொருளாதார ரீதியாக மாபெரும் புரட்சி ஏற்படப் போகிறது என்பதைச் சொன்ன போது அவ்வளவு எளிதாக யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் அமெரிக்க வல்லரசு மத்திய கிழக்கில் ஏற்படப் போகும் இந்தப் பொருளாதாரப் பிரளயத்தை, அரபு மண்ணிலிருந்து பீறிட்டு எழப்போகும் இந்த கருப்புத் தங்கத்தை முன்கூட்டியே புரிந்து கொண்டு, முந்திக் கொண்டு சவூதி ஆட்சியாளர்களோடு ஒப்பந்தம் செய்து கொண்டது.

பூமியிலிருந்து எண்ணெய் வெளியே எடுக்கப்பட்ட செய்தி வெளி உலகிற்குச் சென்றவுடன் உலகின் பெரு முதலாளிகள் அனைவரின் பார்வையும் அரபு நாடுகள் மீது விழுந்தது.
1950-க்குப் பிறகு அடுத்து வந்த 25 ஆண்டுகளில் உலகில் உற்பத்தி செய்யப்பட்ட நுகர்வுப் பொருட்களில் ஏறக்குறைய முக்கால்வாசிப் பொருட்கள் அரபு நாடுகளை மையப்படுத்தியே உற்பத்தி செய்யப்பட்டன. உலகிலேயே வாங்கும் திறன் படைத்த மக்கள் அதிகம் வாழும் பகுதியாக அரபு நாடுகள் மாறிப்போயின. எண்ணெய் விற்பனை மூலம் பெறப்பட்ட அபரிமிதமான வருவாய் வளைகுடா நாடுகள் என்று சொல்லப்படும் 6 அரபு நாடுகளில் வாழும் மக்களின் மனோபாவத்தையும் வாழ்க்கைச் சூழலையும் அடியோடு மாற்றியது.
இன்று உலக கச்சா எண்ணெய் வளத்தில் 56% மத்திய கிழக்கு நாடுகளில் இருக்கிறது. கச்சா எண்ணெய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் சவூதி அரேபியா உலகின் முதன்மை நாடாகத் திகழ்கிறது.

1960களில் எண்ணெய் விற்பனை இலாபம் அதிகப்படியாக வரத் தொடங்கியபோது அரபு பகுதிகளில் புதிய தொழிற்சாலைகளும் வர்த்தக நிறுவனங்களும் பெருகத் தொடங்கின. அதில் பணியாற்றுவதற்கு அதிகப்படியான தொழிலாளர்கள், மனிதவளம் தேவைப்பட்டது. தென்னிந்திய முஸ்லிம் சமூகத்தில் அரபு நாடுகள் பற்றிய செய்திகள் மெல்ல மெல்ல பரவத் தொடங்கியது. மலையாளிகள் முந்திக் கொண்டனர். அரபு நாடுகளோடு அவர்களுக்கு இருந்த வரலாற்று ரீதியான தொடர்பும் அவர்களின் அரபு மொழிப் புலமையும் வெகு விரைவாக மலையாளிகள் அரபு நாடுகளுக்கு புலம் பெயர்ந்திட வாய்ப்பை பெருமளவு ஏற்படுத்தித் தந்தது.

தமிழகத்தில் கல்வி கற்று  அரசு வேலை வாய்ப்பு பெற ஆர்வம் இன்மையாலும் மேலும் அரசுப் பள்ளிகளில் முஸ்லிம்கள் முற்றாகப் புறக்கணிக்கப்பட்டமையாலும் ஏற்பட்ட சிக்கலால் 1965க்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அரபு நாடுகளுக்கு பொருளீட்டச் செல்லும் வழக்கம் தொடங்கியது. தொடக்கக் காலத்தில் அரபு நாடுகளில் செல்வம் பெருகப் பெருக பாலைவனங்களிலும் மணற்கோட்டைகளிலும் வாழ்ந்த அரபு மக்கள் தங்களின் வாழ்வாதாரங்களை உயர்த்திக் கொள்ள கட்டமைப்பு  பணிகளில் கவனம் செலுத்தினர். அதனால் கட்டமைப்புப் பணிகளில் பணியாற்றிட தொழிலாளர்கள் அதிகம் தேவைப்பட்டனர். உடல் உழைப்பைச் செய்யும் திறன் வாய்ந்த இளைஞர்கள் பெருமளவில் அரபு மண்ணை நோக்கிச் செல்ல தொடங்கினர். பல ஆயிரம் ரூபாய் விசாவிற்கு பணம் கொடுத்துச் சென்றனர். அதில் சிலர் ஏமாந்து அனைத்தையும் இழந்து ஊர் திரும்பினர். ஆனாலும் அரபு நாடுகளுக்கான போக்குவரத்து நாடுக்கு நாள் பெருக தொடங்கியது.

அரபு மண்ணில் கச்சா எண்ணெய் உற்பத்தி மேலும் பெருகப் பெருக, செல்வம் வந்து சேரச் சேர அரபு மக்களிடையே வசதிவாய்ப்புகள் மற்றும் வெளிநாடுகளின் தொடர்புகள் அதிகரித்தன. வெளிஉலகத்திற்கான விமானப் போக்குவரத்து அதிகரித்தன. அரபு மக்கள் அமெரிக்க ஐரோப்பிய நாடுகளுக்கு பெருமளவில் பயணம் மேற்கொண்டனர். அதன் காரணமாக மேலை நாட்டு மக்களின் மேற்கத்திய வாழ்வியல் வழிமுறைகளின் தாக்கம் ஏற்பட்டது. 1980க்குப் பிறகு உலக நாடுகளோடு போட்டி போட்டு அரபு நாடுகள் பொருளாதார ரீதியாக வளரத்தொடங்கிய போது நவீன அறிவியல் தொழில்நுட்ப துறைகளில் அதிகம் கவனம் செலுத்த தொடங்கினர். அந்த நேரத்தில்  நிதி மற்றும் மேலாண்மை தொடர்பாக படித்த பட்டதாரிகளும் பல துறை சார்ந்த தொழில் நுட்ப வல்லுநர்களும் அரபு நாடுகளுக்குத் தேவைப்பட்டனர். இந்தச் செய்திகள் உலகம் முழுவதும் பரவியது. அந்த நேரத்தில் தமிழக முஸ்லிம் சமுதாயத்தில் அரபு நாட்டு மோகம் உச்சத்தைத் தொட்டது. தொடக்க காலத்தில் படிக்காமலேயே – பட்டம் பெறாமலேயே உடல் உழைப்பைக் கொடுத்து தமிழகத்திலிருந்துச் சென்றவர்கள் பெற்ற ஊதியம் இந்தியாவில் அந்த நேரத்தில் முதுநிலை பட்டதாரிகள் பெற்ற ஊதியத்தைக் காட்டிலும் பல மடங்கு அதிகம். ஆனால் 1980-க்குப் பிறகு அரபு நாடுகளின் தேவை மாறி வருவதையும் மக்களின் மனநிலை மாறி வருவதையும் அரபு நாடுகளின் எதிர்கால திட்டங்கள் மற்றும் முதலீடுகள் எப்படி அமையப் போகிறது என்பதைப் புரிந்து கொள்ளாமல் அதற்கேற்ப தங்களை தயார் செய்யாமல் தமிழக முஸ்லிம் சமூகம் வழக்கம் போல் அலட்சியம் செய்தது.

படித்து பட்டம் பெற்று நிர்வாகத் திறன் படைத்தவர்களாகவும் தொழில் நுட்ப வல்லுனர்களாகவும் தரம் உயர்த்திக் கொண்டு செல்ல வேண்டிய தமிழக முஸ்லிம் சமூகம் படிக்காமலேயே கிடைக்கும் பொருளாதாரத்தில் இருந்த மோகத்தின் காரணமாக மாபெரும் தவறிழைத்தது. மனித ஆற்றலை மேம்படுத்தி தொழில்நுட்ப வல்லுனர்களாக மாற்றும் தன்மையுடைய கல்வியை பாதியில் விட்டுவிட்டு எவ்வளவு சீக்கிரம் பாஸ்போர்ட் எடுக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் எடுத்துக் கொண்டு குடியிருந்த வீட்டை, நகையை, நிலத்தை என அனைத்தையும் அடகு வைத்து அல்லது விற்றுவிட்டு ஏஜென்டுகளிடம் கொடுத்து அரபு நாடுகளை நோக்கி தாறுமாறாக ஓடியது. அதேநேரத்தில் இந்தியாவில் படித்து பட்டம் பெற்ற சில சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மாறி வந்த அரபு உலகத்தின் தேவையைச் சரியாக கணித்து, சிந்தித்து அதற்கேற்ப தங்களின் திறன்களை வளர்த்துக் கொண்டு அரபு நாடுகளின் அரசு நிர்வாகத்திற்கும் பெருகி வந்த தொழிற்சாலைகளுக்கும் நிதியை ஆளுமை செய்யக்கூடிய உயர் பொறுப்புகளுக்கும் பணி நியமனம் பெற்று குடும்பத்தோடு சகல விதமான சலுகைகளோடு சென்றனர்.

அதே வேளை கல்வியின் தன்மை உணராத முஸ்லிம் சமூக இளைஞர்கள் பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு லேபர் வேலை செய்திட பைத்தியம் பிடித்து ஓடினார்கள். திருமணம் ஆன ஒரு மாதம், இரண்டு மாதம் என்று வாழ்க்கையின் அபூர்வமான விழுமங்களை காசிற்காக காற்றில் பறக்கவிட்டு ஓடினார்கள். இரண்டு வருடங்கள் மூன்று வருடங்கள் என்று கட்டிய இளம் வயது மனைவியையும் பிள்ளைகளையும் தவிக்க விட்டு தன்நிலை உணராது ஓடினார்கள். இஸ்லாமிய மார்க்கம் தடை செய்த போதும் ஓடினார்கள். இதனால் சில ஊர்களில் சில நல்ல குடும்பங்கள் சீரழிந்து சின்னாபின்னமானது. முஸ்லிம் சமூகத்தின் மீது அக்கறையுள்ள பல அறிஞர் பெருமக்கள் பெருகி வந்த இந்த விபரீதத்தைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். தொண்டை கிழிய தெருத்தெருவாக கத்தினார்கள். ஆனாலும் தடுத்திட முடியவில்லை. கடந்த 35 வருடங்களாக கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வந்த இந்த மோகம், இந்த போதை தலைக்கு ஏறி தற்சமயம் அரபு நாட்டை விட்டால் சம்பாதிக்க வேறு வழியில்லை என்ற அளவிற்கு மனநிலை உருவாகி அதற்கே முழுதாக அடிமைப்பட்ட சமூகமாக முஸ்லிம் சமூகம் மாறிவிட்டது.

பல வருடங்கள் பிரிந்து வாழ்ந்ததின் விளைவாக கணவன் மனைவி இடையே கருத்து முரண்பாடுகளும் கட்டுப்படாத பிள்ளைகளுமாய் பல குடும்பங்கள் பலவிதமான சிக்கல்களை அனுபவித்து வருகின்றன. குறிப்பாக கடலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, இராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில் வாழும் முஸ்லிம்கள் இதனால் எல்லையில்லாத மனவேதனைகளையும் துன்பங்களையும் அனுபவித்து வருகின்றனர். கூடுதல் சம்பாத்தியம் என்ற ஒரே காரணத்திற்காக வாழ்க்கை என்கிற உன்னதமான உயிர்ப்புள்ள ஜீவனை தொலைத்துவிட்டனர். பிழைப்பிற்காக வாழ்க்கையைத் தொலைத்தனர்.
தாங்களாக மாற்றிக் கொண்ட சொகுசு வாழ்க்கை முறைக்கு ஏற்ப வசதி வாய்ப்புகளை தக்க வைத்துக் கொள்ளத் தேவைப்படும் பொருளாதாரம் குடும்பத்தை விட்டுவிட்டு அரபு நாடுகள் சென்றால் தான் கிடைக்கும் என்று நினைத்துக் கொண்டு வாழ்க்கை தொலைந்தாலும் பரவாயில்லை என்ற அளவிற்கு மார்க்கத்தின் பாதுகாப்பு வட்டத்தை விட்டும் இந்த மக்களை வெளியேற வைத்தது நுகர்வு கலாச்சாரம்.

இறைவனும் இறைதூதரும் வகுத்துத்தந்த அற்புதமான வாழ்வியல் கோட்பாட்டை உடைத்தெறிந்தனர்.
புரையோடிப் போய் உள்ள இந்த வாழ்வியல் சீர்கேட்டிற்குத் தீர்வு கண்டாக வேண்டும். ஒரு தலைமுறை அறியாமையால் செய்த தவறை அடுத்த தலைமுறையும் செய்ய அனுமதிக்கக்கூடாது.
தலைமுறை தலைமுறையாக சமூகத்தில் தவறுகள் நடக்கிறது என்றால் தலைமைத்துவம் சரியில்லை என்பது நிருபணம் ஆகும்.
என்னதான் மாற்று?
வளைகுடா நாடுகளின் வளம் மற்றும் பொருளாதார வளர்ச்சி குறித்து ஆய்வு செய்து 2020களில் அரபு மண்ணில் ஏற்படப் போகும் பொருளாதார பூகம்பம் பற்றி உலக வர்த்தக அமைப்பும் (கீஜிளி) உலக வங்கியின் ஆய்வறிக்கையும் பல பொருளாதார வல்லுனர்களின் ஆய்வுகளும் இனி அடுத்து வரும் 20-30 ஆண்டுகளில் வளைகுடா நாடுகள் உலகில் அசைக்க முடியாத பொருளாதார சக்திகளாகப் பரிணமிக்க இருக்கின்றன என்கிற தகவலை வயிற்றெரிச்சலுடன் வெளியிட்டுள்ளன.

மத்திய கிழக்கில் அரசியல் ரீதியாகப் பல நெருக்கடிகள் சூழ்ந்து இருந்தாலும்கூட அதையெல்லாம் தாண்டி வளம் நிறைந்த பகுதிகளாகவும் புதிய வேலைவாய்ப்புகளை வாரி வழங்கும் நிலப்பகுதிகளாகவும் உருவெடுக்க இருக்கின்றன.

21ஆம் நூற்றாண்டிற்கான அறிவியல் தொழில்நுட்ப துறைகளில் ஏற்படப் போகும் ஒரு மாற்றத்திற்காக அரபு நாடுகள் தயாராகி வருகின்றன. இனி அரபு நாடுகள் காணப்போகும் மிகப்பெரும் பொருளாதார மாற்றத்தின் பலன்கள் முஸ்லிம் சமூகம் முழுமையாகப் பெற இதோ எளிமையான வழிகள்.

இப்போது அரபு நாடுகளுக்கு வேலை தேடிச் செல்வதைக் காட்டிலும் இன்னும் அதிகமாக செல்ல வேண்டும்! ஆனால், முன்பு சென்றது போல் அல்லாமல் கட்டிய மனைவியையும்குழந்தைகளையும் கையோடு கூட்டிச் செல்ல வேண்டும். சென்ற தலைமுறை இழந்த உன்னதமான வாழ்வை இந்தத் தலைமுறையாவது பெற்றிட இன்றே தயாரிப்புகளைத் துவங்கி இனியாவது குடும்பத்தோடு அரபு நாடுகளில் குடியேறுவோம்.

அதற்கான தகுதிகளை வளர்த்துக் கொள்வோம். அறிவும் ஆற்றலுமிக்க தொழில்நுட்ப வல்லுனர்களாக, மிகச்சிறந்த நிர்வாகத் திறன் பெற்றவர்களாக மாறி வரும் அரபுலகின் தேவையறிந்து அதற்கேற்ற வல்லுனர்களாக நமது அடுத்த தலைமுறையை மாற்றிடுவோம்.

தற்போதைய உலகளாவிய பொருளாதார மந்த நிலையில் கூட துபாய் தவிர்த்த பிற அரபு நாடுகள் எந்த விதத்திலும் பாதிப்படையவில்லை. துபாயில் கூட கட்டுமானத் துறையும் அதோடு தொடர்புடைய துறைகளும்தான் வீழ்ச்சியைச் சந்தித்தன.

கட்டுமானத் துறை சார்ந்த வேலைகள் அதிகம் நடைபெற்றதால் பெரிய பாதிப்பு போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தற்போது இது மாறி வருகிறது.

CMN சலீம்

 

 


Tuesday, December 07, 2010

வங்கி மைனஸ் வட்டி - Part 1


நாவலாசிரியராக, சிறுகதை ஆசிரியராக, வசனகர்த்தாவாக உங்களுக்கு முருகனைத் தெரிந்திருக்கும். வங்கியியல் வல்லுநராக ஒரு புதிய அறிமுகத்தை இப்போது செய்துகொள்ளுங்கள். உலகெங்கும் இன்று பிரபலமாகப் பேசப்படும் இஸ்லாமிக் பேங்கிங்கை இக்குறுந்தொடரில் அறிமுகப்படுத்துகிறார் இரா. முருகன்.
அமெரிக்காவிலும், பிரிட்டன் உட்பட பல ஐரோப்பிய நாடுகளிலும் கவர்மெண்ட் செலவில் தேசிய அளவு பயம் ஏற்படுத்தி வைக்கப்பட்டிருப்பது இஸ்லாமிய சமூகத்தைக் குறித்துத்தான்.
கான், ஹசன், முஸ்தபா இப்படிப் பெயரை பாஸ்போர்ட்டில் பார்த்தாலே மேற்படி நாடுகளில் ஏர்போர்ட் இமிகிரேஷன் அதிகாரிகளின் பிளட் பிரஷர் எகிறிப்போகிறது. காது மடல் சிவக்க பாஸ்போர்ட்டை விரித்து பெஸ்ட் செல்லர் லிஸ்ட் புத்தகம்போல் ஒரு பக்கம் விடாமல், ஒரு வரி விடாமல் படிக்கிறார்கள்.
பல சந்தர்ப்பங்களில் உள்ளே தனியறையில் மணிக்கணக்காக விசாரணை செய்து பின் லேடனுக்கு ஒண்ணு விட்ட, எட்டு, எண்பது விட்ட தம்பிக்கு மச்சினன் சம்சாரத்துக்கு மாமா பிள்ளை இல்லை என்று உறுதிப்படுத்திக்கொண்டு, கடனே என்று கதவைத் திறக்கிறார்கள்.


ஓர் இனத்தையே மறைமுகமாக பயங்கரவாதி முத்திரை குத்திவைத்திருக்கும் இந்த நாடுகள் கூட, 'இஸ்லாமிய வங்கி' என்றால் இருகரம் நீட்டி வரவேற்று 'வாங்க, கோக் சாப்பிடுங்க' என்று உபசரிக்கின்றன.
அப்படி என்ன மந்திரச் சொல் இந்த இஸ்லாமிய வங்கியியல் (Islamic Banking) என்பது?
இட்லிக் கடை வைப்பதுபோல், இம்பாலா கார் கம்பெனி நடத்துவதுபோல், வங்கித்தொழிலும் லாபத்தைக் குறிக்கோளாக வைத்துத்தான் நடத்தப்படுவது. நேர்மையாக, தெய்வத்துக்கு, மனச்சாட்சிக்கு விரோதம் இல்லாமல் வங்கித்தொழிலை சமூக நோக்கில் நடத்த வழி சொல்வது இஸ்லாமிய வங்கியியல். லாபத்தையும் இழப்பையும் பகிர்ந்துகொள்ள வழிசெய்யும் ஒரு சமுதாயவியல்  அது.


ஆசையே துன்பத்துக்குக் காரணம் என்றார் கௌதம புத்தர். வட்டியே வங்கித் துறையில் நேர்மையின்மைக்குக் காரணம் என்கிறது இஸ்லாமிய வங்கியியல். ஆக, இஸ்லாமிக் பேங்கிங்கின் ஆத்திசூடி 'வட்டி வாங்காதே வழங்காதே' என்று தொடங்குகிறது. இந்த அரிச்சுவடியை எட்டாம் நூற்றாண்டிலேயே எழுதிவிட்டார்கள் என்பது விசேஷம். ஆமா சார், இஸ்லாமிய வங்கியியல் உலகம் முழுக்கக் கடைப்பிடிக்கப்படுகிற ஐரோப்பிய பேங்கிங்குக்கு மிக மிக மூத்தது.
இஸ்லாமிய வங்கியியலின் ஆதார சுருதி ஷரியா. அல்-ஷரியா என்று புனிதச் சட்டமாகப் போற்றப்படுவது இது.
மனிதன் எப்படி நடக்கவேண்டும் என்ற இறைவனின் விருப்பம்தான் ஷரியா.  பல கோடி இஸ்லாமியர்கள் இப்படித்தான் நம்புகிறார்கள். காசு கொடுத்து வாங்கும் வங்கித் தொழிலா, கையில் ஆயுதம் எடுத்து யுத்தம் புரியும் போர்த் தொழிலா, சுற்றுச் சூழலா, சமுதாய முன்னேற்றமா, ஷரியா தொடாத துறையே இல்லை.


ஷரியாவில் காணப்படும் வர்த்தகம் பற்றிய விதிகள் இஸ்லாமிய வங்கியியலில் முழுமையாகக் கையாளப்பட்டுள்ளன.
இந்த விதிமுறைகள் ஃபிக் அல்-முவாமலத் (Fiqh al-Muamalat) அதாவது, கொடுக்கல் வாங்கல் பற்றிய இஸ்லாம் மார்க்க விதிகள் என்று அழைக்கப்படும்.  இந்த விதிகளில் ஏதாவது ஒண்ணு ரெண்டை சாய்ஸில் விட்டாலும் அது இஸ்லாமிக் பேங்கிங் இல்லை, இல்லை இல்லவே இல்லை.
சரி, ஷரியா எங்கே இருந்து வந்தது?
இஸ்லாமிய மதநூல் புனித குரான் ஷரியாவுக்கு ஊற்றுக்கண். ஷரியாவின் இன்னொரு கண்ணாக விளங்குவது நபிகள் நாயகம் அவர்களின் முழு வாழ்க்கையுமேதான். அவர் பேசியது, போதித்தது, வாழ்ந்து காட்டியது இவை எல்லாவற்றையும் சித்திரிக்கும் ஹடித் (Hadith) என்ற வாழ்க்கைக் குறிப்புகள் இவை.
ஷரியா என்றால், 'தாகம் தீர்க்கும் குளிர்நீர் ஊற்றுக்கு இட்டுச் செல்லும் பாதை' என்று வெண்தாடியைத் தடவிக்கொண்டு நீண்ட சொல் விளக்கம் தருவார்கள் மார்க்க அறிஞர்கள். மரபு சார்ந்த… என்ன மரபு சார்ந்த வேண்டிக் கிடக்கு… ஐரோப்பிய தொழில் தர்மம்தான் நம் மரபாச்சே, ஐரோப்பிய  வங்கியியல் அண்மைக் காலத்தில், அதாவது கி.பி. 2008-ல் உலக அளவிலே பொருளாதார நெருக்கடிக்கு மூல காரணமாக இருந்தபோது, எத்தைத் தின்னால் பித்தம் தீரும், இந்த நிதிநிலை முடக்குவாதம் குணப்படும் என்று உலக வங்கியியல் அறிஞர்கள் அறிவுத் தாகத்தோடு அலைந்தார்கள். அப்போது அவர்களுக்குக் 'குளிர்நீர் ஊற்றாக' தட்டுப்பட்டது ஷரியாவும் இஸ்லாமிய வங்கியியலும்தான். நெஞ்சில் கையை வைத்துச் சொல்லச் சொன்னால் ஜார்ஜ் புஷ்கூட இதை மறுக்காமல், மறக்காமல் சொல்வார். எதுக்கும் இங்கிலீஷில் கேட்டுப் பார்க்கவும்.


ஷரியாவை நாம் புரிந்துகொள்ளும் சௌகரியத்துக்காக ஐந்து பகுதிகளாகப் பிரிக்கலாம்.
1)    மதம் சார்ந்த வழிபாட்டு நெரிமுறைகள் பற்றிய இபாதா (ibadah)
2)    (ஏற்கனவே பார்த்த) முவாமலத் – கொடுக்கல் வாங்கல் விதிகள் (mu'amalat)
3)    நீதி, பண்பாடு பற்றிச் சொல்லும் ஆதாப் (adab)
4)    நம்பிக்கைகள் பற்றிய லிதிகாதத் (i'tiqadat)
5)    ஷரியாவைக் கடைப்பிடிக்காவிட்டால் விதிக்கப்படவேண்டிய தண்டனைகள் பற்றிய உகுபத் (uqubat)
ஒரு நொடியில் இருந்து ஒரு முழு வாழ்க்கை வாழ்ந்து முடித்து அடங்குகிறது வரையான காலத்துக்குத் தேவையான சகல விதிமுறைகளும் ஷரியாவில் உண்டு. இதில் சொல்லப்படாத ஏதாவது சம்பந்தமாக வழிகாட்டுதல் வேண்டியிருந்தால் இஸ்லாம் மூன்று விதங்களில் அதற்குத் தீர்வு காணலாம் என்று வகுத்திருக்கிறது.
1)    அறிஞர்கள் கூடி ஆலோசித்து வழங்கும் பெரும்பான்மைத் தீர்வு
2)    ஒற்றை இஸ்லாமியப் பேரறிஞர் அலசி ஆராய்ந்து வழங்கும் தீர்ப்பு
3)    பழக்க வழக்கத்தின் அடிப்படையில் வழங்கப்படும் தீர்வு
தீர்வு வழங்கும்போது ஒன்றே ஒன்றை மனத்தில் இருத்திக்கொண்டால் போதும் – புனித குரானில் சொல்லியிருப்பதற்கு மாறாக அது இருக்கக்கூடாது.
ஷரியாவில் இருந்து பெறப்பட்ட இஸ்லாமிய வங்கியியல் விதிமுறைகள் பற்றி சிறு குறிப்பு வரைக என்றால் அடுத்த ஆறு பாராவையும் கனகம்பீரமாகச் சொல்லலாம்.


பணத்தைக் கொடுத்து வாங்கி, அதாவது 'வாடகைக்கு விடும்போது' (renting of money) அதற்குக் கூலி வாங்குவது பாவம். அந்தக் கூலிதான் வட்டி. இஸ்லாம் மொழிநடையில் வட்டி என்பது 'ரிபா' (Riba). பாவம் என்பது 'ஹராம்' (Haram).
ரிபா …சாரி'பா, அது ஹராம் நெம்பர் ஒன்.
ஷரியா தடைவிதித்த தொழில்களில் பணத்தை முடக்குவதும், அவற்றை எடுத்து நடத்தி லாபம் பார்ப்பதும்கூட ஹராம். போதைப் பொருள்கள், மது, சூது இப்படி எத்தனையோ இந்த ஹராம் பட்டியலில் உண்டு. அரசியல் இல்லை.
புனித குரான் சொல்கிறது, 'இறைவன் வணிகம் நடத்த அனுமதித்துள்ளான். ஆனால் ரிபாவுக்குத் தடை விதித்திருக்கிறான்.'
சவாலைச் சமாளிக்காமல் சம்பாத்தியம் இல்லை (There is no reward without taking any risk) – இதுவும் இஸ்லாமிய வங்கியியலின் இன்னொரு அம்சம்தான்.
இந்தச் சவாலும் சம்பாத்தியமும் உழைப்பு, முதலீடு ரெண்டுக்கும் பொருந்தும். உழைத்து, உழைப்பின் வெற்றியை அடைகிற சவாலைச் சந்திக்கும் தொழிலாளியும், நேர்மையாக முதலீடு செய்து லாபம் ஈட்டும் முதலாளியும் ஷரியாவின் கண்களில்  
ஒரேபோல!
இன்ஷா அல்லா, அடுத்த வாரம் தொடரலாம்.

நன்றி: தமிழ்பேப்பர்.நெட்

Source: http://www.tamilpaper.net/?p=555

 
 
 

 


Monday, December 06, 2010

நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் ஓபன் ஸ்கூல்





படிக்கணும்னு ஆசைப்பட்ட நேரம் வீட்டுல வசதியில்லை. இப்போ வசதியிருக்குஆனா,இந்த வயசுல ஸ்கூல்ல சேர்க்க மாட்டாங்க. என் பிள்ளைங்களை கேட்டு படிச்சிலாம்னா நமக்கு தேர்வு யார் நடத்துவாங்க... என்று யோசிப்பவர்களா நீங்கள்?

வீட்டுல வசதி கிடையாது. குடும்பத்தை நான்தான் கவனிக்கணும். -வேலைக்கும் போயாகணும். ஆனாபடிக்கணும்னு ஆசை இருக்காகஸ்கூலாக்கோடுடோரியல் மையத்துக்கோ போகறதுக்கு நேரம் கிடையாது. ஆனால்பள்ளிப்படிப்பை முழுசும் முடிக்கணும்னு ஆசைப்படறீங்களா... உங்களுக்கான கல்வி மையம் தான் உத்திரப்பிரதேசத்திலுள்ள நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் ஓபன் ஸ்கூல். தேசிய அளவிலான இந்த கல்வி நிலையத்தில் படிக்க நாட்டில் எந் மூலையில் இருந்தாலும் விண்ணப்பிக்கலாம். இது முற்றிலம் மத்திய அரசால் அங்கீகரிக்கட்ட கல்வி நிலையம். இங்கு படித்து முடித்து கிடைக்கும் சான்றிதழை வைத்து கொண்டு நாட்டில் எந்த பல்கலைகழகத்திலும் பட்ட படிப்பை தொடரலாம்.

இந்த திறந்த நிலைபளள்ளிக்கு நாடுமுழுவுதும் பதினொரு முக்கிய நகரங்களில் மையங்கள் செய்படுகின்றன. இது தவிர - 3367 பயிற்சி மையங்கள் உள்ளன. தற்போது இந்தகல்வி நிலையத்தில் உயர்நிலைமேல்நிலை கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கை மட்டும் சுமார் 15 லட்சம்.

யார் யார் சேரலாம்?பள்ளியில் இடைநின்ற மாணவர்கள்பள்ளியில் படிக்காத மாணவர்கள் இங்கே தொலை நிலைக்கல்வி மூலம் படிக்கலாம். வயது 14பூர்த்தியாகியிருந்தால் போதும். இங்கே பத்தாம் வகுப்புபண்ணிரண்டாம் வகுப்பு,தொழிற்படிப்புஸ்போக்கன் இங்கிலீஷ் போன்ற தனிப்பட்ட செல்ப் இம்ப்ரூவ்மெண்ட் பயிற்சிகளும் அளிக்கபடுகின்றன. பத்தாம் வகுப்பு படிக்க விண்ணப்பிப்பவர்கள் குறைந்தபடசம் ஐந்து பாடங்களை கண்டிப்பாக படித்தாக வேண்டும். இதில் குரூப் ஏ,குரூப் பி. என்னும் இரண்டுபிரிவுகள் உள்ளன. குரூப் ஏ வில் தமிழ்தமிழ்ஆங்கிலம்,ஹிந்திஉட்பட 17 - மொழிப்பாடங்கள் உள்ளன. மாணவர்கள் விரும்பும் ஏதாவது ஒரு மொழிப்பாடத்தையோஇரண்டு மொழி பாடங்களையோ தேர்ந்தெடுத்து படிக்கலாம்.
குரூப் பி பிரிவில் கணிதம்அறிவியல்சமூக அறிவியல்பொருளியல்பிசினஸ் ஸ்டடீஸ்ஹோம் சயின்ஸ்சைக்காலஜிபோன்ற 10 பாடங்கள் உள்ளன. மேல்நிலை கல்வி பாடப்பிரிவில் இதேபோல் இரண்டு பிரிவின் கீழ் பாடங்கள் வாழங்கப்படுகின்றன. ஆனால் மேல்நிலை கல்வி படிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள்பத்தாம் வகுப்பில் கண்டிப்பாக தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எட்டாம் வகுப்புபத்தாம் வகுப்புபன்னிரண்டாம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு குறைந்த பயிற்சி கட்டணத்தில் தொழிற்கல்வி படிக்கவும் இந்த கல்வி நிலையம் வழிவகை செய்கிறது.

எட்டாம்வகுப்பு  படித்துவிட்டுகுடும்ப சூழ்நிலை காரணமாக எலக்ட்ரீஷியன்பிளம்பர்,மெக்கானிக்கல் போன்ற தொழில்களை செய்து கொண்டு இருப்பவர்களுக்கு தங்கள் தொழில்  சார்ந்த சான்றிதழ் இருக்காது. அதனால் அவர்கள் கடைசிவரை அரசுப் பணிக்கோபொதுத்துறை நிறுவனங்களுக்கோ பணிக்கு செல்ல முடியாது. ஆனால் இந்த  கல்வி நிலையத்தில் திறந்த நிலை படிப்பாக ஆறு மாத பயிற்சிஒரு ஆண்டுப் பயிற்சி மற்றும் குறைந்த வார பயிற்சிகளாக  பல தொழிற்கல்வி பயிற்சி அளிக்கப்படுகிறது.

ஏற்கனவே தொழில் தெரிந்திருக்கும் மாணவர்களும்தொழில் அறிவு இல்லாத மாணவர்களும் இந்த  பயிற்சியில் சேர்ந்து படிக்கலாம். இரண்டாண்டு பயிற்சியாக டிப்ளமோ இன் ரேடியோலாஜி படிப்பு கற்று கொடுக்கப்படுகிறது. இப்படிப்புக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் கண்டிப்பாக பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இது தவிர கிராம சுகாதாரம்,  மகளிர்  மேம்பாடு குறித்த சான்றிதழ் பயிற்சி அளிக்கப்படுகின்றன. இப்படிப்புக்கு விண்ணப்பிக்க நான்காம் வகுப்பு படித்திருந்தால்போதுமானது. இது தவிர ஆறு மாத கால பயிற்சியாக  எலக்ட்ரிக்கல்,மோட்டார் ரீவைண்டிங்ரேடியோ பழுதுபார்த்தல்உடை தயாரித்தல்அழகு பயிற்சி போன்றவை கற்று தரப்படுகின்றன. இந்த பயற்சிக்கு எட்டாம் வகுப்பு படித்திருந்தால் போதுமானது. இதே போல டி.டி.பி. மற்றும் கணினி ஹார்டுவேர் மாத பயிற்சி பெற மாணவர்கள் குறைந்தபட்சம் பன்னிரண்டாம் வகுப்பு படித்திருக்க வேண்டும். குறைந்த கட்டணம்நிறைந்த கல்விகல்வி நிலையங்களுக்கு சென்று படிக்க வேண்டியதில்லை. புத்தகங்கள் உங்கள் வீடு தேடி வரும். வேலைவாய்ப்பு அதிகமுள்ள தொழிற்கல்வி,இவை அனைத்தையும் மொத்தமாக வழங்கும் சிறந்தஒரு திறந்தவெளி பள்ளியாக செயல்படுகிறது --------------------------
நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் ஓபன் ஸ்கூல். 

Link: 
As received from email




Sunday, November 21, 2010

'ICE' ( In Case Of Emergency)..






We all carry our mobile phones with names & numbers stored in its memory but nobody, other than ourselves, knows which of these numbers belong to our closest family or friends.
 
If we were to be involved in an accident or were taken ill, the people attending us would have our mobile phone but wouldn't know who to call. Yes, there are hundreds of numbers stored but which one is the contact person in case of an emergency? Hence this 'ICE' (In Case of Emergency) Campaign
 
The concept of 'ICE' is catching on quickly. It is a method of contact during emergency situations. As cell phones are carried by the majority of the population, all you need to do is store the number of a contact person or persons who should be contacted during emergency under the name 'ICE' ( In Case Of Emergency)..
 
The idea was thought up by a paramedic who found that when he went to the scenes of accidents, there were always mobile phones with patients, but they didn't know which number to call. He therefore thought that it would be a good idea if there was a nationally recognized name for this purpose. In an emergency situation, Emergency Service personnel and hospital Staff would be able to quickly contact the right person by simply dialing the number you have stored as 'ICE..'
 
For more than one contact name simply enter ICE1, ICE2 and ICE3 etc. A great idea that will make a difference!
 
 
Let's spread the concept of ICE by storing an ICE number in our Mobile Phones today!!!
 
 




Wednesday, June 16, 2010

அந்த இரண்டணா



எம்.ஆர்.எம். ஃபாத்திமா


சிறந்த மார்க்க விற்பன்னரான அஹ்மத் ஜீவன் ஒளரங்கசீப் ஆலம்கீர் பாதுஷாவின் ஆன்மிக ஆசானாக விளங்கினார். புனித ரமழான் மாதத்தில் இருவரும் அடிக்கடி சந்தித்துப் பேசி மகிழவும் ஒன்றாகச் சேர்ந்து தொழவும் செய்துவந்தனர். ரமழான் மாதம் முடிந்து ஈத் பெரு நாளும் வந்தது. வழக்கம்போல் அன்றும் பெருநாள் தொழுகையை ஒன்றாகச் சேர்ந்து நிறைவேற்றினார்கள்.


பின்னர் அஹ்மத் ஜீவன், பாதுஷாவிடம் விடைபெற விரும்பிய பொழுது, “சற்றுப் பொறுங்கள்”! என்று கூறிவிட்டுத் தம் சட்டைப் பைக்குள் கையை விட்டு ஏதேனும் இருக்கிறதா? என்று துழாவினார் பாதுஷா.


ஆம்! இரண்டு அணா நாணயம் ஒன்று அதில் கிடந்தது. அதை எடுத்துத் தம் ஆசானிடம் கொடுத்து வழி அனுப்பினார். அவர்,தம் மாணவர் தந்த இரண்டணா நாணயத்தை மகிழ்வோடு பெற்றுக் கொண்டு தம் இல்லம் திரும்பினார்.


ஒளரங்கசீப் பதினான்கு ஆண்டுகள் தக்காணத்தில் தங்கிவிட்டு டில்லி திரும்பினார். அவர் வந்ததும் அவருடைய முதல் அமைச்சர் அவரை அணுகி, “ஆலம்பனாஹ்! பெரும் நிலக்கிழாராக விளங்கும் அஹமத் ஜீவனிடமிருந்து அவருடைய சொத்துக்களுக்கான வரியை இதுகாறும் வசூலிக்கவில்லை. அதனை அவரிடமிருந்து வசூலிக்கத் தாங்கள் அனுமதி வழங்க வேண்டும்என்று கூறி நின்றார்.

அதுகேட்டு ஒளரங்கசீபுக்குப் பெரிதும் வியப்பாக இருந்தது.

என்ன சாதாரண, எளிய வாழ்க்கை, வாழ்ந்து வந்த ஆசான் அஹ்மத் ஜீவன் பெரும் பணக்காரராகி விட்டாரா? எனக்கு என்னவோ இது புரியாப் புதிராக உள்ளதேஎன்று எண்ணியவராய் சிறிது நேரம் சிந்தனையில் வீற்றிருந்தார்.


பின்னர் தாம் டில்லி திரும்பிவிட்டதாகவும் தம்மை வந்து சந்திக்கு மாறும் அஹ்மத் ஜீவனுக்கு மடல் தீட்டினார்.


மீண்டும் ரமழான் மாதம் வந்தது. அஹ்மத் ஜீவன் டில்லி வந்து சேர்ந்தார். அவர் எப்பொழுதும் அணியும் எளிய அறிகுறிகள் ஏதும் காணப்படவில்லை. எனவே ஒளரங்கசீப் அவரிடம் யாதும் கேட்காது வெறுமனே இருந்து விட்டார்.


பின்னர் ஒருநாள், அஹ்மத் ஜீவன் ஒளரங்கசீபை நோக்கி, “ஈத் அன்று தாங்கள் கொடுத்த அந்தப் புனிதமான இரண்டணா நாணயம் என் வாழ்க்கையில் மாபெரும் திருப்பத்தை உண்டு பண்ணிவிட்டது. என்று கூற அதைக் கேட்ட ஒளரங்கசீப், “என்ன திருப்பம் அது? என்று வியப்புடன் வினவினார்.


அப்பொழுது அஹ்மத் ஜீவன், “அந்த இரண்டணா நாணயத்தைக் கொண்டு பருத்தி விதை வாங்கி விதைத்தேன்,இறையருளால் அது செழித்து வளர்ந்து பன்மடங்கு இலாபத்தைத் தந்தது. அந்த மூலதனத்தைக் கொண்டு மேலும் உற்பத்தியைப் பெருக்கினேன். இன்று அது பல லட்சம் மடங்காகப் பெருகிவிட்டதுஎன்று கூறினார்.

அதுகேட்ட ஒளரங்கசீப் தம்முடைய ஊழியர் ஒருவரை அழைத்து, சாந்தினி செளக்கில்லேவாதேவி வாணிபம் செய்யும் சேட் உதம் என்பவரை ஹிஜ்ரி 1069 –ஆம் ஆண்டின் அவருடைய கணக்கேட்டை எடுத்துக்கொண்டு உடனே தம்மை வந்து காணுமாறு கூறும்படி பணித்தார்.


அரச ஆணை ஏற்றதும் தம்முடைய ஹிஜ்ரி 1069 –ஆம் ஆண்டின் கணக்கேட்டை எடுத்துக் கொண்டு அரண்மனைக்கு விரைந்தார் சேட் உதம்.


அப்பொழுது அவருடைய மனம் என்னவென்னவோ எண்ணிப் புண்ணாகியது.


அரண்மனையை அடைந்த அவர் சற்று தைரியத்தை வரவழைத்துக் கொண்டு பாதுஷாவுக்கு வாழ்த்துரை வழங்கித் தம்முடைய கணக்கேட்டை அவர் முன் சமர்ப்பித்தார்.


அவருடைய அச்சத்தை முகக்குறியால் விளங்கிக்கொண்ட பாதுஷா, “ஒன்றுக்கும் கவலற்க ! இங்கு வந்து உம்முடைய ஹிஜ்ரி 1069 –ஆம் ஆண்டின் வரவுசெலவுக் கணக்கை படித்துக்காட்டும்என்று கூறினார்.


சேட் உதம் கணக்கேட்டைத் திறந்து படித்துக்கொண்டே வந்தார். அப்பொழுதுஇரண்டணா நாணயம்என்று படித்தவர், அதை யாருக்குக் கொடுத்தோம் என்பதை அறியாது விழித்தார்.


உடனே ஒளரங்கசீபின் முகத்தில் புன்னகை மின்னியது. “கூறும் யாருக்கு அந்தப் பணம் கொடுக்கப்பட்டது?” என்று வினவினார்.


அதைக்கேட்ட சேட் உதம், பெருமூச்சு விட்டவராய்ஆலம்பனாஹ் ! அது ஒரு சோகக்கதைஎனக்கூறி அக்கதையைக் கூறத்தொடங்கினார்.


ஆலம்பனாஹ் ! ஓர் இரவு, இந்த டில்லி மாநகரில் கனத்த மழை பெய்தது. அதன் காரணமாக புதியதாகக் கட்டப்பட்ட என் வீட்டின் கூரை ஒழுகி அதனால் வீட்டின் உள்ளே மழை நீர் வந்துவிட்டது. நான் ஓட்டையை அடைக்க எவ்வளவோ முயன்றும் பயனில்லை. மழைநீர் ஒழுகிக்கொண்டே இருந்தது. இந்நிலையில் வெளியில் சென்று எவரேனும் உதவுவார்களா என்று சுற்றிலும் நோக்கினேன். அப்பொழுது விளக்குக் கம்பத்தின் அருகே ஒருவர் நின்று கொண்டிருந்தார். பார்ப்பதற்கு அவர் ஒரு கூலியாள் போன்று தோன்றியது. எனவே அவரை அழைத்து கூரையைச் செப்பனிடச் சொன்னேன். அதற்குச் சம்மதித்து அவர் மூன்று நான்கு மணிநேரம் வேலை செய்து கூரையைச் செப்பனிட்டார். உடனே நீர் ஒழுகுவது நின்று விட்டது. அவர் வேலையை முடிக்கும்பொழுது வைகறைத் தொழுகைக்கான பாங்கு சொல்லப்பட்டது. அப்பொழுது வேலையை நிறுத்தி விட்டு தொழுகையை நிறைவேற்றினார். அதன் பின் தம்முடைய வேலையை முடித்துவிட்டதாகவுன், தாம் செல்ல விரும்புவதாகவும் கூறினார்.


அப்பொழுது, அவருக்கான கூலையைக் கொடுக்க எண்ணி என் சட்டைப் பைக்குள் கைவிட்டேன். அங்கு இரண்டே இரண்டு அணாதான் இருந்தது. சற்று நேரம் எனக்கு என்ன செய்வதென்றே விளங்க வில்லை. ‘எனக்கு இந்நேரத்தில் உதவியவருக்கு இது போதா தென்றுஎண்ணி என் மனம் வருந்தியது. வேறு வழியின்றி அதனை அவர் கையில் கொடுத்து, “உமக்கு இச்சொற்பத் தொகையை அளிக்க வருந்துகிறேன். விடிந்ததும் என் கடைக்கு வாரும் ! அங்கு உமக்கு வேலைக்கான முழுக்கூலியையும் தந்து விடுகிறேன்என்று கூறினேன். அதற்கு அவர், “எனக்கு இதுவே போதும். நான் மீண்டும் வரமாட்டேன்என்று கூறினார். நானும் என் மனைவியும் எவ்வளவோ கூறியும் அவர் கேளாது விறுவிறுவெனச் சென்று விட்டார்.


அன்றிரவு எங்களுக்கு உதவிபுரிந்து எங்களுக்கு ஆயிரக்கணக்கான ரூபாய்கள் இழப்பு ஏற்படாமல் காத்த அந்த நல்லவரை நான் இதுவரை எங்கு தேடியும் காணவில்லை. எனவே அவரைப்பற்றி ஒன்றும் தெரியாததால் நான் கணக்கேட்டில் அவரின் பெயரைக் குறிப்பிடாது செலவை மட்டும் எழுதிவைத்தேன்.”


-இவ்விதம் கூறி முடித்தார் சேட் உதம்.


இதன் பின் பாதுஷா அவருக்கு அரசாங்க அங்கி ஒன்றை அன்பளிப்பாக வழங்க அதனை மரியாதையுடன் வாங்கிக் கொண்டு விடை பெற்றுச் சென்றார்.


அவர் சென்றதும் ஒளரங்கசீப் அஹ்மத் ஜீவனை நோக்கி, “என்னுடைய ஆன்மீக ஆசானாகிய தாங்கள் எனக்கு நற்பண்புகளைக் கற்றுத் தந்திருக்கிறீர்கள். அதன் காரணமாக நான் என்னுடைய சொந்தத் தேவைகளுக்கு ஒருபோதும் பொதுக்கருவூலத்தை நாடுவ தில்லை. நான் மணிமுடி சூடிய நாளிலிருந்து இரவில் இரண்டு மணி நேரம் விழித்திருந்து ஒரு மணிநேரம் திருக்குர்ஆனை பிரதி எடுப்பதிலும், ஒரு மணிநேரம் தொப்பி நெய்வதிலும் கழித்து பொருள் ஈட்டி வருகின்றேன்.மேலும் வாரத்தில் இரண்டு இரவுகளில் மாற்றுடை அணிந்து மக்களின் தேவைகளை அறிய நகரைச் சுற்றி வருகின்றேன்.அப்படி ஓர் இரவு சுற்றி வந்த பொழுது, அந்த மனிதருக்கு உதவி செய்ததால் கிடைத்த பணமே அந்த இரண்டணா நாணயம்என்று கூறினார்.


அது கேட்ட அஹ்மத் ஜீவனின் புருவங்கள் மேலேறின.

நிச்சயமாக என்னுடைய மாணவர் கடின உழைப்பின் மூலம் இப்பணத்தை ஈட்டி இருப்பார். அதனால்தான் இறைவன் அதில்பரக்கத்செய்துள்ளான் என்று நானும் ஏற்கனவே எண்ணினேன். ஆனால் இத்துணை கடின உழைப்புச் செய்து அந்த இரண்டணாவை ஈட்டி இருப்பீர்களென்று நான் கனவிலும் எண்ணவில்லை. தங்களை போன்ற ஒரு தூய்மையாளரை மாணவராகப் பெற்ற என்னுடைய பேறே அதினினும் நற்பேறு !!” என்று வாயாரப் புகழ்ந்து பாதுஷாவை வாழ்த்தினார் அஹ்மத் ஜீவன்.


( வரலாற்றில் சில பொன்னேடுகள் எனும் நூலிலிருந்து )

நன்றி : இனிய திசைகள் ( டிசம்பர் 2002 )