Thursday, March 31, 2011

தற்பெருமை


 
தற்பெருமை
 
அல்லாஹ் அருள்மறை குர்ஆனில் குறிப்பிடுகிறான்:
 
நபியேநீர் பூமியில் பெருமையாக நடக்க வேண்டாம்.(ஏனெனில்நிச்சயமாக (இப்படி நடப்பதால்)நீர் பூமியை பிளந்து விடவும் முடியாதுமலையின் உச்சி அளவுக்கு உயர்ந்து விடவும் முடியாது. (அல் குர்ஆன் 17:37)

நரகவாதிகளை உங்களுக்கு அறிவிக்கட்டுமா, தற்பெருமையும், ஆணவமும் கொண்டஒவ்வொருவரும் தான் என நபி (ஸல்அவர்கள் கூறினார்கள்.

(அறிவிப்பவர்ஹாரிஸா இப்னு வஹப் (ரலிநூல்புஹாரி,முஸ்லிம்)
 



எளிமை

நபி (ஸல்அவர்கள் கூறினார்கள்நீங்கள் கேட்கவில்லையா, 'எளிமை என்பது ஈமானின்(இறைநம்பிக்கையின்அடையாளமாகும் திண்ணமாக எளிமை என்பது ஈமானின் அடையாளமாகும்.' (அறிவிப்பவர்அபுஉமாமா (ரலிநூல்கள்:அபுதாவூத், மிஷ்காத்.

நபி (ஸல்அவர்கள் என்னை யமன் நாட்டுக்கு அனுப்பிவைத்தபோது கூறினார்கள் : முஆதே!சொகுசு வாழ்க்கையைத் தவிர்த்துக் கொள் ஏனெனில் அல்லாஹ்வின் அடியார்கள் சொகுசுவாழ்க்கை வாழ்பவர் அல்லர் (அறிவிப்பவர்முஆது இப்னு ஜபல் (ரலிநூல்:முஸ்னத் அஹ்மத்மிஷ்காத்)
 



''எங்கள் இறைவனேஎங்கள் பாவங்களையும் எங்கள் காரியங்களில் நாங்கள் வரம்பு மீறிச்செய்தவற்றையும் மன்னித் தருள்வாயாகஎங்கள் பாதங்களை உறுதியாய் இருக்கச் செய்வாயாக! ....'' (திருக்குர்ஆன் 3 : 147)